• Tamil

    மாயக்காடு

    பவானி வெங்கடேஷ் மழைக்கால இரவில், வானம் முழுக்க கரிந்த மேகங்கள் சூழ்ந்திருந்தன. வையாபுரம் என்ற சிறிய கிராமத்தின் எல்லைக்குச் சற்று அப்பால் இருந்த ஒரு பழங்கால வனத்தை வட்டார மக்கள் “மாயக்காடு” என்று அழைத்தனர். அந்தக் காட்டுக்குள் யாரும் நுழையத் துணியவில்லை. பழைய காலத்தில் அங்கு நுழைந்தவர்கள் யாரும் திரும்பவில்லை என்ற வதந்திகள் பரவி இருந்ததால், வனத்தைப் பற்றிய மர்மம் தலைமுறை தலைமுறையாக பசுமையாகவே இருந்தது. வையாபுரத்தில் வாழ்ந்தவன் சின்னதுரை. அவனது வயது பதினாறு. உயரமாக, பருமனாக, கண்களில் எப்போதும் கேள்விகள் நிறைந்தவனாக இருந்தான். அவன் தாத்தா முனியசாமி, எப்போதும் ஒரு கதையைக் கூறுவார் – “மாயக்காட்டிலே ஒரு அரைகுறையான ஆலமரம் உண்டு. அந்த மரத்தின் கீழ் தூங்கும் ஒரு மூதாட்டி இருக்கிறாள். அவளைக் கண்டவுடன், உனக்கு தேவையான ஒன்று கேள். ஆனால், பதில் கேட்கும் முன் அவள் கண்களைத் திறக்கக் கூடாது.” இந்தக் கதை சின்னதுரைக்குள் கனமாக பதிந்திருந்தது. ஏனெனில்…